துக்ளக் தர்பாரில் சீமானை சீண்ட வேண்டுமென்று வைக்கப்பட்ட பெயரா ‘ராசிமான்’?… விளக்கமளித்த பார்த்திபன்!
January 15, 2021 / 09:16 AM IST
|Follow Us
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் இப்போது 14 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘துக்ளக் தர்பார்’ என்ற படத்தின் டீசரை விஜய் சேதுபதி ட்விட்டரில் கடந்த திங்கட்கிழமை ரிலீஸ் செய்தார். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.
படத்தில் மிக முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன், கருணாகரன், ‘பிக் பாஸ் 4’ மூலம் ஃபேமஸான சம்யுக்தா நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க, ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரித்து கொண்டிருக்கிறார்.
கோவிந்த் வஸந்தா இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டீசரில் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானை கிண்டல் செய்வது போல் பார்த்திபன் ‘ராசிமான்’ என்ற ரோலில் நடித்துள்ளதாக கூறி சர்ச்சையை கிளப்பியது. தற்போது, இது தொடர்பாக இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ட்விட்டரில் “நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக ’துக்ளக் தர்பார்’ குறித்து விளக்கமளித்து விட்டேன். அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று வைக்கப்பட்டதல்ல.
இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல. (புதிய பாதை நமது) இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும் ’நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன். எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சனையை இயக்குனரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல>> pic.twitter.com/wNSqUmncIW
<< சார்ந்தவனல்ல.(புதிய பாதை நமது)இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்’நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன்.எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர்பிரச்சனையை இயக்குனரிடம் கூறி,ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன் pic.twitter.com/4VkBClaZlG