நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான ‘இரவின் நிழல்’… மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பார்த்திபன்!

  • December 10, 2022 / 03:29 PM IST

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்து, தயாரித்த ‘இரவின் நிழல்’ படம் இந்த ஆண்டு (2022) ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

ஒரே ஷாட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘இரவின் நிழல்’ படத்தில் ஒரு நான் லீனியர் திரைக்கதையை ஒரே ஷாட்டில் படமாக்கி புதிய சாதனை படைத்திருந்தார் பார்த்திபன்.

இதில் மிக முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரியங்கா ரூத், பிரிகிடா, சிநேகா குமார், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார், ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்திருந்தார். தற்போது, இப்படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus