உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான ‘இரவின் நிழல்’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த பார்த்திபன்!

  • May 19, 2022 / 12:35 PM IST

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்து, தயாரித்திருக்கும் புது படம் ‘இரவின் நிழல்’. ஒரே ஷாட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘இரவின் நிழல்’ படத்தில் ஒரு நான் லீனியர் திரைக்கதையை ஒரே ஷாட்டில் படமாக்கி புதிய சாதனை படைத்திருக்கிறார் பார்த்திபன்.

இதில் மிக முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரியங்கா ரூத், பிரகிதா, சிநேகா குமார், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் சிங்கிள் டிராக் மற்றும் டீசர் வெளியானது. இந்த சிங்கிள் டிராக் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. தற்போது, இந்த படத்தை வருகிற ஜூன் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus