OTTயில் வெளியாகிறதா பார்ட்டி திரைப்படம்- தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!
August 26, 2020 / 10:26 PM IST
|Follow Us
அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பார்ட்டி”. பல மாதங்களுக்கு முன்பு வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த திரைப்படம் OTTயில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் வெளியீடு குறித்து இதன் தயாரிப்பு நிறுவனம் தற்போது செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் கூறியுள்ளதாவது “எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பார்ட்டி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வருகிறது. அதை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடுவதற்கான எந்த நோக்கமும் எங்களிடம் இல்லை. இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்காக காத்திருக்கிறோம்” என்று தெளிவாக தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
மேலும் இந்த படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான செய்தியை எங்கள் தயாரிப்பு நிறுவனமே வெளியிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்கள். இதன்மூலம் வெங்கட்பிரபுவின் பார்ட்டி திரைப்படம் OTTயில் வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.
இந்த படத்தில் ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், ஷாம், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, நாசர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். பிரேம்ஜி அமரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.