தமிழில் 2017 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
தமிழ் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன் மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனின் “உத்தம வில்லன்’ திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து இவர் கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி இடத்தை தற்போது தக்க வைத்துள்ளார்.
தற்போது இவர் KJR புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவலை இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
Very happy to announce #KJRStudiosNext, a strong female-centric supernatural thriller starring @paro_nair, directed by @mpthamrae 🎥
FIRST LOOK will be out tomorrow at 5⃣PM! @EzhumalaiyanT @proyuvraaj @gobeatroute pic.twitter.com/1MDBHSrjnM— KJR Studios (@kjr_studios) December 2, 2020