சிவகார்த்திகேயனின் அந்த பட பாடல் பவன் கல்யாணுக்கு ரொம்ப பிடிக்குமாமே… அவரே போட்ட ட்வீட்!
September 4, 2020 / 08:01 PM IST
|Follow Us
சிவகார்த்திகேயனின் அந்த பட பாடல் பவன் கல்யாணுக்கு ரொம்ப பிடிக்குமாமே… அவரே போட்ட ட்வீட்! டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, Mr.லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ’ என படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர், அயலான்’ மற்றும் இயக்குநர் தேசிங் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், நேற்று சிவகார்த்திகேயன் முன்னணி தெலுங்கு நடிகரான பவன் கல்யாணுக்கு ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு பவன் கல்யாண் நன்றி தெரிவித்ததுடன், சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஊதா கலரு ரிப்பன்’ என்ற பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும், அப்பாடலை தான் பலமுறை பார்த்து ரசித்ததாகவும் சொல்லியிருக்கிறார். இந்த ட்வீட்டை பார்த்த சிவகார்த்திகேயன், பவன் கல்யாணுக்கு நன்றி கூறியுள்ளார்.