OG : பவன் கல்யாண் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் ‘OG’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • January 30, 2024 / 06:16 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண். இப்போது இவர் நடிப்பில் ‘ஹரி ஹர வீரமல்லு, OG, உஸ்தாத் பகத் சிங்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘OG’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுஜீத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு (2023) பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷலாக இப்படத்தின் GLIMPSE-ஐ ரிலீஸ் செய்தனர்.

இந்த GLIMPSE படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, இப்படத்தை இந்த ஆண்டு (2024) செப்டம்பர் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus