ஏ.ஆர்.ரகுமானை பாராட்டிய பிசி ஸ்ரீராம்!

  • August 24, 2020 / 10:23 PM IST

1981ம் வருடம் வெளிவந்த “வா இந்தப் பக்கம்” தமிழ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம். இவர் “குருதிப்புனல்” படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரமெடுத்தார்.

இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய பிற மொழி படங்களிலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் இயக்குனர் மணிரத்னமுடன் இணைந்து ஒளிப்பதிவு செய்த மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, அலைபாயுதே ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் பி.சி.ஸ்ரீராம். இவர் ஒளிப்பதிவில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘சைக்கோ’.

இவர் தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “இந்த லாக்டவுன் காலங்களில் ஏ.ஆர். ரகுமானின் இசை நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமைந்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் சார் உங்களுக்கு நன்றி. உங்கள் பாடல்கள் இந்த லாக்டவுனில் எங்களுக்கு பெரிய பலத்தை கொடுத்துள்ளது” என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

பிசி ஸ்ரீராம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து “மே மாதம்”, “காதலர் தினம்”, “அலைபாயுதே”, “திருடா திருடா” உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus