தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக தற்போது திகழ்பவர் நடிகர் யோகிபாபு. 2016 ஆம் வருடம் வெளியான “ஆண்டவன் கட்டளை” படத்தில் நடித்தது மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற யோகிபாபு, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” மற்றும் “பரியேறும் பெருமாள்” படங்களின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்த “காக்டைல்” திரைப்படம் கடைசியாக ஜீ5 எனும் ஓடிடி தளத்தில் வெளியானது.
இவர் நடித்துள்ளா டிக்கிலோனா, ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இவர் நடிக்கவுள்ள சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, அடங்காதே திரைப்படங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நின்று கொள்வான், பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி, கன்னி ராசி, ட்ரிப் ஆகிய திரைப்படங்களின் வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.

தற்போது இவர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் “பேய் மாமா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மாஸ்க் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். பாக்யா சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ராஜ் ஆர்யன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
