திரில்லர் + தாய்மை + சஸ்பென்ஸ் = பெண்குயின் டிரைலர்

  • June 11, 2020 / 02:37 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியாகவிருக்கும் ‘பெண்குயின்’ படத்தின் டிரைலர் தற்போது இணையதளங்களில் வெளியாகி மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் ‘மகாநதி’ என்ற படத்தில் தன் சிறந்த நடிப்பின் மூலம் தேசிய விருது பெற்றார் . இவர் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘பெண்குயின்’. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த டிரைலரில் உள்ள காட்சிகள் மனதை பதைபதைக்கும் விதமாகவும் ,தொலைந்த குழந்தையை தேடும் ஒரு தாயின் கதறலை படம்பிடித்துக் காட்டுகிறது .மேலும் பின்னணி இசை இந்த காட்சியை பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இந்த படம் கொரோனா லாக்டோன் காரணமாக அமேசான் ப்ரைம் என்ற OTT தளத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்த படத்தை ஈஷாவர் கார்த்திக் என்ற புது இயக்குனர் இயக்கி உள்ளார் . இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் இந்த திரில்லர் கதையில் ஒரு குழந்தையின் தாயாக நடித்துள்ளார்.தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷின் படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus