பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணமான நாள் முதலே பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
இவர்கள் திருமணமான மறு நிமிடமே பீட்டர் பாலின் முதல் மனைவி தங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகவில்லை என்ற பிரச்சினையை ஆரம்பித்தார். அன்றிலிருந்து பல விமர்சனங்களுக்கு உள்ளானார் வனிதா விஜயகுமார்.
சமீபத்தில் சூர்யா தேவி என்பவரால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான வனிதா விஜயகுமார், அவர் மீது சைபர் புள்ளியிங் கேஸ் ஒன்றை கொடுத்தார். இதைத்தொடர்ந்து வனிதா மீது அவர் புகார் அளித்தார்.
இவ்வளவு பிரச்சனைக்கு நடுவில் தற்போது தங்கள் வாழ்வில் நடந்தது என்ன என்பது பற்றி பீட்டர் பால் மனம் திறந்து ஒரு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர், தனக்கும் தனது முதல் மனைவி ஹெலனுக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் குறித்தும், ஹெலன் தன்னை பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்தும் மனம் திறந்து கூறியிருக்கிறார்.
அவர் கூறியுள்ளதாவது ” ஹெலனும் நானும் ஏழு வருடங்கள் பிரிந்து வாழ்ந்தோம். ஏற்கனவே பல கருத்து வேறுபாடுகள் எங்களுக்குள் இருந்துதான் வந்தது. நான் குடிப்பழக்கத்திற்கு அப்போதுதான் உள்ளானேன். ஆனால் ரிஹேப் சென்டர் செல்லும் அளவுக்கு எனக்கு குடி பழக்கம் இல்லை. நான் என் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து இருந்த சமயத்தில் தொழில் ரீதியாகவும் தோல்வியை சந்தித்து டிப்ரஷனில் இருந்தேன். அப்போது தற்கொலை முயற்சி செய்தேன். நான் உயிருக்கு போராடிய நிலையில் கூட ஹெலன் என்னை வந்து பார்க்கவில்லை. என் குழந்தைகளை காண என்னை ஏழு வருடங்கள் அனுமதிக்கவே இல்லை. என்ன இருந்தாலும் நான் ஒரு நல்ல தந்தையாக இருந்திருக்கிறேன். இன்றுவரை என் மகனிடம் பேசியும் அவருக்கு தேவையானவற்றை செய்தும் வருகிறேன்” என்று உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
பீட்டர் பாலன் முதல் மனைவி ஹெலன் பீட்டர் பால் போதைக்கு அடிமையானவர் என்றும் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது என்றும் அதனால் தான் அவரை பிரிந்து வாழ்ந்தார் என்றும் கூறியிருந்தார். அதை முழுவதுமாக மறுத்து தனக்கும் அவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணங்களால் மட்டுமே பிரிந்ததாக பீட்டர் பால் தற்போது கூறியுள்ளார்.