பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் தான் நடிகை நயன்தாரா. நயன்தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார். இவர்கள் இருவரும் ‘நானும் ரவுடி தான்’ படத் தயாரிப்பின் போது சந்தித்தனர். தற்போது இந்த ஜோடி கோலிவுட்டின் அசைக்க முடியாத ஜோடியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு எதிர்கால அன்னையர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா. அவர் வெளியிட ட்விட்டர் பதிவில், எதிர்கால தாய்மார்கள் அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள். கையில் அழகான ஒரு குழந்தையுடன் அவர் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். ‘பெண்களுக்கு இருக்கும் பல கடமைகளில் தாயாக இருப்பதே சிறந்தது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.