தளபதியை சந்தித்த வரலக்ஷ்மி !

  • September 1, 2022 / 08:37 PM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர் .

இசையமைப்பாளர் தமன் முதன் முதலாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் . பொதுவாக நடிகர் விஜய் நடிக்கும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் எனவே தமன் இசை மீது அனைவரும் மிகவும் எதிர் பார்ப்புடன் இருக்கின்றனர் . இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .

இந்நிலையில் நடிகர் விஜய் வாரிசு படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்று உள்ளார் .அப்போது அதே விமானத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இருந்துள்ளார் . விமானத்தில் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus