‘பிதாமகன், கஜேந்திரா’ படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!

  • October 3, 2023 / 01:23 PM IST

2003-ஆம் ஆண்டு சூர்யா – விக்ரம் இணைந்து நடித்து வெளியான படம் ‘பிதாமகன்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்கியிருந்தார். சூப்பர் ஹிட்டான இப்படத்தை ‘எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் வி.ஏ.துரை தயாரித்திருந்தார்.

தயாரிப்பாளர் வி.ஏ.துரை ‘பிதாமகன்’ மட்டுமில்லாமல் ‘என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, கஜேந்திரா’ ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார். சமீபத்தில், தயாரிப்பாளர் வி.ஏ.துரை வெளியிட்டிருந்த ஒரு வீடியோ பதிவில் தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டதுடன், சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாகவும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா உட்பட சில திரையுலக பிரபலங்களும் இவருக்கு பண உதவி செய்தனர். தற்போது, தயாரிப்பாளர் வி.ஏ.துரை இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus