• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “வன்னியர் மக்களிடம் சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்”… பா.ம.க-வால் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்!

“வன்னியர் மக்களிடம் சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்”… பா.ம.க-வால் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்!

  • March 7, 2022 / 06:03 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“வன்னியர் மக்களிடம் சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்”… பா.ம.க-வால் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய்யும், மிக முக்கிய ரோலில் சத்யராஜும் நடித்துள்ளார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இதன் பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற மார்ச் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயலாளர் இள.விஜயவர்மன் கடலூர் மாவட்டத்தின் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் “திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 2-ஆம் தேதியில் வெளியான படம் ‘ஜெய் பீம்’.

ஞானவேல் இயக்கிய இப்படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து, நடிகர் சூர்யா நடித்துள்ளார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமான இதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க SI அந்தோனிசாமி என்ற தலித் கிருத்துவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தை வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல காட்டியுள்ளனர். சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Etharkkum Thunindhavan
  • #pmk
  • #pmk requested theatre
  • #pmk requested theatre owners not to screen suriya's etharkkum thunindhavan
  • #Suriya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version