“வன்னியர் மக்களிடம் சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்”… பா.ம.க-வால் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய்யும், மிக முக்கிய ரோலில் சத்யராஜும் நடித்துள்ளார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இதன் பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற மார்ச் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயலாளர் இள.விஜயவர்மன் கடலூர் மாவட்டத்தின் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் “திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 2-ஆம் தேதியில் வெளியான படம் ‘ஜெய் பீம்’.

ஞானவேல் இயக்கிய இப்படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து, நடிகர் சூர்யா நடித்துள்ளார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமான இதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க SI அந்தோனிசாமி என்ற தலித் கிருத்துவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தை வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல காட்டியுள்ளனர். சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

Share.