உங்கள் தமிழ் உணர்வை இந்த வகையில் காண்பிக்க வேண்டாம்
January 27, 2023 / 06:27 PM IST
|Follow Us
தமிழில் பிரபல பாடலாசிரியரான கவிஞர் தாமரை ” “ஜல்லிக்கட்டு பற்றி பேசி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. “ஜல்லிக்கட்டு என்பது மனிதத்தன்மைக்கு எதிரானது. விலங்குகளை வதை செய்வது சரியல்ல. ஆகவே இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும்” என தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். இது பற்றி சமீபத்தில் தனது முகநூல் பக்கத்திலும் இதே கருத்தை பதிவிட்டு இருந்தார்.
“நாட்டு காளைமாடுகளை காக்க ஜல்லிக்கட்டு தேவை, இது வீர விளையாட்டு, இதை ஒழிக்க வெளிநாட்டு சதி நடக்கிறது என்பதெல்லாம் வெத்து வாதம். தமிழ்ப் பண்பாட்டைக் காக்க வேண்டுமெனில், தமிழில் பேசிப் பழகுங்கள், அம்மா அப்பா என்று அழையுங்கள், குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுங்கள்…! விலங்குளை வதைத்து உங்கள் தமிழ் உணர்வை காண்பிக்க வேண்டாம்” என தெரிவித்து இருந்தார். இதற்கு ஜல்ல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
“கவிஞர் தாமரை திரைப்பட பாடல் எழுதுவதில் தனது கருத்துக்களை சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளட்டும். தமிழனின் மரபுகளை மறக்கடிக்க, ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு வேறு கூட்டத்துடன் சேர்ந்து அவர் சதி செய்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது. கவிஞர் தாமரை தனது கருத்திற்கு மறுப்பு தெரிவித்து அறிவிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம். தமிழகம் முழுவதும் அவரது கொடும்பாவியை எரிப்போம்” என்று தெரிவித்துள்ளது
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus