தமிழில் பிரபலமான பாடலாசிரியர் என்றால் அவர் வைரமுத்துதான். தன் மொழி புலமையாலும் கவி புலமையாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர், தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
பின்பு அவர் தரப்பிலிருந்து வந்த விளக்கத்தில், இது ஒரு சாதாரண செக்கப் என்றும், வைரமுத்து முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.
இவர் தனது 40 வருட திரையுலக பயணத்தில் சுமார் 7500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 1980 ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த “நிழல்கள்” படத்தில் ‘ஒரு பொன்மாலை பொழுது’ பாடலை எழுதியது மூலம் தன் கவி பயணத்தை தொடங்கினார். இந்தப் பாடலை இளையராஜா இசையமைத்திருந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.
வைரமுத்து வரிகளில், இசைஞானி இளையராஜா இசையில், பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் போன்ற வெற்றி படங்களின் பாடல்களைத் தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.