சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…
1.கேப்டன் மில்லர் :
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘கேப்டன் மில்லர்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதனை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்களை ரிலீஸ் செய்தனர்.
இந்த டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
2.அயலான் :
டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இப்போது இவர் நடிப்பில் ‘அயலான்’, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’-ஐ இயக்குநர் ரவிக்குமார் இயக்க, ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் வலம் வரும் ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இதன் GLIMPSE, டீசர், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
3.மெரி கிறிஸ்துமஸ் :
சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.
இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள புதிய படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இதற்கு ப்ரீத்தம் இசையமைத்துள்ளார், மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பூஜா லதா சூர்தி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘டிப்ஸ் பிலிம்ஸ் & மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
4.மிஷன் சேப்டர் 1 :
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் வலம் வருபவர் அருண் விஜய். இப்போது இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், பார்டர், வணங்கான், மிஷன் சேப்டர் 1’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘மிஷன் சேப்டர் 1’ படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபிஹசன், பேபி இயல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
5.ஹனுமான் :
தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தேஜா சஜ்ஜா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஹனுமான்’. சூப்பர் ஹீரோ படமான இதனை பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் அம்ரிதா அய்யர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில், இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.
படத்தை தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சைனீஸ், ஜப்பனீஸ் என 10 மொழிகளில் வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
6.சைந்தவ் :
தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கடேஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆக்ஷன் படம் ‘சைந்தவ்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கோலானு இயக்கியுள்ளார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் ஆர்யா, நவாசுதீன் சித்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
வெங்கடேஷின் 75-வது படமான இதனை ‘நிஹரிகா எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. இப்படத்தை வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.