வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் “பொன்னி நதி ” வீடியோ பாடல்

  • November 14, 2022 / 12:33 PM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து உள்ளார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்ற ‘ பொன்னி நதி ” என்கிற பாடலின் வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus