அடேங்கப்பா …பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் இத்தனை கோடியா ?
November 1, 2022 / 07:34 PM IST
|Follow Us
இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது .
இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து உள்ளார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை , கேரளா ,கர்நாடகா , மும்பை டெல்லி என்று அடுத்து அடுத்து தொடர் பயணங்கள் செய்து வந்தனர் .
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் ( செப்டம்பர் 30) வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் வெளியான முதல் 32 நாளில் உலக அளவில் 497.01 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus