ராஜா ராஜா சோழன் வருகிறார் !

  • July 2, 2022 / 04:04 PM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து வருகிறார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .
பாகுபலி , கே.ஜி.எஃப், போன்ற மற்ற மொழி படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது .

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படத்தின் டீசர் ஜூலை மாதம் 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலில் இந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த அனைத்து முன்னணி நடிகர்களும் கலந்து கொள்ளப் போகிறார்கள் மேலும் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வர இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது . ஆனால் தற்போது இந்த விழா சென்னையில் நடக்க இருப்பதாகவும் ரஜினி ,கமல் , சூர்யா ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு ஒரு மோஷன் போஸ்ட்டரை வெளியீட்டு உள்ளது . அதில் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus