பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்!!

  • June 18, 2022 / 11:02 AM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து வருகிறார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .
பாகுபலி , கே.ஜி.எஃப், போன்ற மற்ற மொழி படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது .


இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படத்தின் டீசர் ஜூலை மாதம் 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலில் இந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த அனைத்து முன்னணி நடிகர்களும் கலந்து கொள்ளப் போகிறார்கள் மேலும் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வர இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus