ராதேஷ்யாம் திரைப்பட படப்பிடிப்பில் இணைந்த பூஜா ஹெட்ஜ்!

  • October 8, 2020 / 08:18 PM IST

பிரபாஸ் நடிப்பில் 4 மொழிகளில் வெளியாகவிருக்கும் அடுத்த திரைப்படம் பிரபாஸ் 20 என்றழைக்கப்பட்ட “ராதே ஷ்யாம்”. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தை இயக்குனர் கே.கே.ராதாகிருஷ்ணா குமார் இயக்கியுள்ளார். யூவி கிரேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

இந்த படம் ஒரு காதல் கதையை மையமாக கொண்ட படம் என்றும், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெட்ஜ் உடனான காதல் யூரோப்பில் நடக்கும்படி அமைந்துள்ளதாகவும், பிரபாஸ் அதிர்ஷ்டம் சொல்லும் நபர் கதாபாத்திரத்திலும், பூஜா ஹெட்ஜ் இளவரசி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பிரபாஸ் கலந்துகொண்டு இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிப்பதற்காக இத்தாலிக்கு நடிகை பூஜா ஹெட்ஜ் பயணம் செய்துள்ளார். அங்கு சென்று இன்ஸ்டாகிராமில் தன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் இவரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தெரிகிறது. விரைவில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus