இரண்டு சைமா விருது வாங்கிய பூஜா !

  • September 13, 2022 / 09:46 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருப்பவர் பூஜா ஹெக்டெ. சம்பித்தில் இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார் . இவர் நடமாடிய அரபிக் குத்து பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . பீஸ்ட் படத்திற்கு பிறகு இவர் நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணைய உள்ள படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . ஆனால் தற்போது பூஜா அந்த படத்தில் இல்லை என்பது உறுதியாகி உள்ளது .

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவின் 28-வது படத்திலும் , ஹிந்தி மொழியில் இரண்டு படமும் தான் வசம் வைத்துள்ளார் . ஹிந்தியில் ஒரு படம் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கும் அந்த படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார் . அந்த படத்தின் பெயர் சிர்கஸ் மற்றொரு படம் “கிசி கா பாய் கிசி கா ஜான் ” இந்த படத்தில் சல்மான் கான் நாயகனாக நடித்து வருகிறார் . படத்தை பார்ஹத் சம்ஜி இயக்கி வருகிறார் .

இந்த நிலையில்தான் பூஜா ஹெக்டே அவர்களுக்கு சைமா விருது 2022 நிகழ்ச்சியில் இரண்டு விருது கிடைத்துள்ளது .அதில் சிறந்த நடிகை மற்றும் யூத் ஐகான் ஆகிய இரண்டு விருதுகளையும் வாங்கி உள்ளார் பூஜா . இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் . தற்போது பூஜா இரண்டு விருதுகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus