துல்கர் சல்மான் திரைப்படத்தில் நடிக்க உள்ள பூஜா ஹெட்ஜ்!

  • December 3, 2020 / 11:29 AM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்போது விளங்குபவர் நடிகை பூஜா ஹெட்ஜ். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து மிகவும் பிஸியாக இருக்கும் நடிகை இவர்.

தெலுங்கில் தற்போது டாப் ஹீரோயினாக இருக்கும் இவர் அடுத்து பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து ஒரு போர் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.

“மகாநதி” படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தையும் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் இவருடன் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு பெரிய ஹீரோயின் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

இந்த படத்தில் நடிப்பதற்கு இவர் 2.50 கோடி சம்பளம் கேட்டதாகவும், இதை குறைப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus