“ரசிகர்களுக்கு விஜய் சாரின் ‘பீஸ்ட்’ சூப்பர் எண்டர்டெயினரா இருக்கப்போகுது”… வைரலாகும் பூஜா ஹெக்டே பேசிய வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ இந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளின் ஷூட்டிங்கும் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

 

Share.