நீச்சல் குளத்தில் ‘கே.ஜி.எஃப் 2’ வில்லன் நடிகருடன் ஹேப்பியாக குளிக்கும் பூஜா ராமச்சந்திரன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • April 18, 2022 / 05:49 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ராமச்சந்திரன். ஆரம்பத்தில் ‘SS மியூசிக்’ டிவி சேனலில் தொகுப்பாளினியாக வலம் வந்த இவர் ‘காஞ்சனா’ என்ற சீரியல் மூலம் நடிகையாக மாறினார். அதன் பிறகு நடிகை பூஜா ராமச்சந்திரனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘நண்பன், காதலில் சொதப்புவது எப்படி, நண்பேன்டா, காஞ்சனா 2, பீட்சா, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், களம், அந்தகாரம்’ என படங்கள் குவிந்தது. 2010-யில் பூஜாவுக்கும், பிரபல VJ க்ரேயிக்கும் திருமணம் நடைபெற்றது. பின், க்ரேயிக்குடன் விவாகரத்து பெற்றுக்கொண்டு 2019-ஆம் ஆண்டு நடிகர் ஜான் கோக்கனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் பூஜா.

ஜான் கோக்கன் ‘கே.ஜி.எஃப் 1 & 2, சார்பட்டா பரம்பரை, வீரம், ஒஸ்தி’ போன்ற பல படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, பூஜா ராமச்சந்திரன் தனது கணவருடன் நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருக்கும் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus