வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் பூனம் பாஜ்வா… வைரலாகும் வீடியோ!

  • June 13, 2023 / 12:37 PM IST

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. ‘மொததி சினிமா’ என்ற தெலுங்கு படம் 2005-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நவ்தீப் நடித்திருந்தார். நவ்தீப்பிற்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்திருந்தார். இது தான் பூனம் பாஜ்வா அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து இரண்டு தெலுங்கு படத்தில் நடித்த பூனம் பாஜ்வா, அடுத்ததாக கன்னட திரையுலகில் என்ட்ரியானார்.

அங்கு தர்ஷனின் ‘தங்கிகாகி’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகிலும் கால் பதிக்க வேண்டும் என்று பூனம் பாஜ்வாவிற்கு ஆசை வந்து விட்டது. பரத்தின் ‘சேவல்’ மூலம் அந்த ஆசை நிறைவேறியது.

‘சேவல்’ படத்துக்கு பிறகு நடிகை பூனம் பாஜ்வாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை’ என படங்கள் குவிந்தது. பின், ‘சைனா டவுன்’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி அங்கையும் சில படங்களில் நடித்தார் பூனம் பாஜ்வா.

கடைசியாக இவர் நடித்த தமிழ் படம் ‘குருமூர்த்தி’. தற்போது, பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus