கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை – பூனம் பாண்டே மறுப்பு

  • May 13, 2020 / 12:47 PM IST

போலீஸ் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மை இல்லை என இந்தி நடிகை பூனம் பாண்டே மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே. இவர் நாஷா என்ற இந்தி படம் மூலம் அறிமுகமானார். மாணவனுடன் ஆசிரியை தகாத உறவு வைத்திருப்பது போன்ற கதையம்சத்தில் உருவான அந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. எ ஜர்னி ஆப் கர்மா உள்ளிட்ட மேலும் சில இந்தி படங்களிலும், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்று பேசி பரபரப்பு ஏற்படுத்தினார். இதேபோல் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை மீறியதாக பூனம் பாண்டேவை போலீசார் கைது செய்ததாகவும், ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று அரசு வற்புறுத்தி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியில் வரவேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் பூனம் பாண்டே ஊரடங்கை மீறி தனது ஆண் நண்பரான சாம் என்பவருடன், மும்பை பாந்த்ரா மற்றும் மரைன் டிரைவ் பகுதிகளில் சொகுசு காரில் சுற்றி வந்ததாக போலீசார் அவரை கைது செய்தாக தகவல் வெளியானது. அவர் பயணித்த பி.எம்.டபுள்யூ சொகுசு காரையும் பறிமுதல் செய்தாகவும் கூறப்பட்டது. இது மும்பை பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் ஊரடங்கில் ஊர் சுற்றியதால், தான் கைது செய்யப்பட்டதாக வந்த தகவல் உண்மை இல்லை என நடிகை பூனம் பாண்டே கூறியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் கூறியதாவது:-

“ஹலோ தோழர்களே, நேற்று இரவு திரைப்பட மராத்தான் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் மூன்று திரைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்துக்கொண்டிருந்தேன். அது வேடிக்கையாக இருந்தது. நான் கைது செய்யப்பட்தாக எனக்கு நேற்றிரவு முதல் நண்பர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. அதை நான் செய்திகளிலும் பார்த்தேன் நண்பர்களே, தயவுசெய்து என்னைப் பற்றி எழுத வேண்டாம். நான் வீட்டில் தான் இருக்கிறேன், நான் நன்றாக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus