‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான சீரியல் ‘பூவே பூச்சூடவா’. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தவர் ரேஷ்மா முரளிதரன். மணிகண்ட குமார் – ரத்தினம் வாசுதேவன் இந்த சீரியலை இயக்கியிருந்தனர். இதில் ரேஷ்மா முரளிதரனின் நடிப்பு ரசிகர்களை அதிக லைக்ஸ் போட வைத்தது.
இதே சீரியலில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தவர் மதன் பாண்டியன். ‘பூவே பூச்சூடவா’ சீரியலுக்கு பிறகு ‘அபி டெய்லர்’ என்ற சீரியலில் ரேஷ்மா முரளிதரனும் – மதன் பாண்டியனும் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்த சீரியல் ‘கலர்ஸ் தமிழ்’ சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.
நடிகை ரேஷ்மா முரளிதரனும் – மதன் பாண்டியனும் காதலித்து வருவதாக தகவல் வண்ணமிருந்தது. சமீபத்தில், “நாங்கள் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறோம்” என ரேஷ்மா மற்றும் மதனே இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். இந்நிலையில், இன்று (நவம்பர் 15-ஆம் தேதி) ரேஷ்மா – மதனுக்கு திருமணம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.