சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் படமான ‘மாயவன்’… பார்ட் 2-வில் ஹீரோ யார் தெரியுமா?

  • May 7, 2021 / 11:47 AM IST

தமிழ் திரையுலகில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த நடிகரின் படத்துக்கோ அல்லது அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் படத்துக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட பல மடங்கு எக்ஸ்பெக்டேஷன், அதே படத்தின் பார்ட் 2 உருவாகும்போது ரசிகர்களுக்கு இருக்கும்.

2017-ஆம் ஆண்டு சயின்ஸ்-ஃபிக்ஷன் மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் வெளியான படம் ‘மாயவன்’. இதில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்க, பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.வி.குமார் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஜாக்கி ஷெராஃப், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தற்போது, இந்த படத்தின் பார்ட் 2 ‘மாயவன் ரீலோடட்’ என்ற டைட்டிலில் உருவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சி.வி.குமாரே தயாரித்து, இயக்கும் இதிலும் சந்தீப் கிஷன் தான் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராக உள்ளதாம். மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus