சிலம்பரசனிடம் தங்க செயினை பரிசாக கேட்ட பிரபல நடிகர்… எதுக்கு தெரியுமா?

  • December 11, 2021 / 05:10 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தை ‘SSI புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுப்பையா ரிலீஸ் செய்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில், ‘அண்ணாத்த’ படம் சூப்பர் ஹிட்டானதால் இயக்குநர் சிவாவின் வீட்டுக்கு சென்ற ரஜினி அவருக்கு தங்க செயினை கிஃப்ட்டாக கொடுத்தார். இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் பிரேம்ஜி, நடிகர் சிலம்பரசனை டேக் செய்து “என்னுடைய அண்ணன் வெங்கட் பிரபுவின் வீட்டு address-ஐ அனுப்பி விடட்டுமா?” என்று ஃபன்னாக ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus