தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் மனோபாலா. இவரை பார்த்தாலே சிரிப்பு வந்து விடும். அந்த அளவிற்கு அதிக படங்களில் நடித்து நம் மனதில் இடம் பிடித்து விட்டார்.
மனோபாலாவின் பாடி லாங்குவேஜ் மற்றும் காமெடி வசனங்கள் தான் ஹைலைட்டாக இருக்கும். இவர் ஆரம்பத்தில் ‘ஆகாய கங்கை, பிள்ளை நிலா, சிறைப்பறவை, ஊர்க்காவலன், மூடுமந்திரம், கருப்பு வெள்ளை, பாரம்பரியம்’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.
தற்போது, கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா (வயது 69) இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.