கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 4’… இந்த பிரபல நடிகரும் ஒரு போட்டியாளராமே!
September 23, 2020 / 04:30 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-க்கான ஷூட்டிங் வெகு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான இரண்டு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது.
நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த இரண்டு ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணமுள்ளது கோலிவுட் வட்டாரம். இந்நிலையில், ‘பன்னீர் புஷ்பங்கள்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் சுரேஷ் ‘பிக் பாஸ் 4’-யில் கலந்து கொள்ளப்போகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. வெகு விரைவில் இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் அந்த பிரபலங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.