‘கொரோனா’ பாதிப்பால் பிரபல நடிகர் பாண்டு காலமானார்… இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!
May 6, 2021 / 10:58 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பாண்டு. 1970-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாணவன்’. ஜெய்ஷங்கர் கதையின் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கியிருந்தார். இது தான் பாண்டு அறிமுகமான முதல் படமாம்.
இந்த படத்துக்கு பிறகு நடிகர் பாண்டுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சிரித்து வாழ வேண்டும், கரையெல்லாம் செண்பகப்பூ, கடல் மீன்கள், பணக்காரன், நடிகன், முத்து, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, சிட்டிசன், சுந்தரா டிராவல்ஸ், வில்லன், கில்லி, வில்லு, சிங்கம்’ போன்ற பல படங்களில் நடித்தார்.
சமீபத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு, இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. 74 வயதான நடிகர் பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Better to switch off from all social media for sometime. Very shocking to read this morning news. #RIPPandu sir, one of the finest human beings & actors.
Going to be on home quarantine for some days. Be safe at home friends. Take care. Very challenging days ahead 🙏🙏🙏 pic.twitter.com/yAvNwmjRms
சிறந்த குணச்சித்திர நடிகரும், என்னுடன் பல திரைப்படங்களில் உடன் நடித்தவரும், நல்ல நண்பருமான பாண்டு மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் #RipPandu
My family friend the great actor and the artist pandu annan passed away today. my marriage, my kid bday, my house warming ceremony and in my films every where his presence is inevitable. Your memories will be in my heart forever… RIP Anna pic.twitter.com/ltG8XsvBLQ