சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பையா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி இயக்கியிருந்தார்.
இதில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மிலிந்த் சோமன், ஜெகன், சோனியா தீப்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார், மதி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படத்தில் கார்த்தி ‘சிவா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, ‘பையா’ பார்ட் 2 எடுக்க இயக்குநர் லிங்குசாமி முடிவெடுத்துள்ளதாகவும், இதில் ஹீரோவாக பிரபல நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் நடிக்கவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.