கன்னட சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ராகவேந்திரா. இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வந்தார். பின், 2002-ல் ரிலீஸான ‘நின்னகாகி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
இந்த படத்தை இயக்குநர் எஸ்.மகேந்தர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு ‘குஷி, ரிஷி, IPC செக்சன் 300, கோகுலா, கோல்மால், ரணதந்தரா, ஹேப்பி நியூ இயர், டாஸ்’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் விஜய் ராகவேந்திரா.
விஜய் ராகவேந்திரா 2007-ஆம் ஆண்டு ஸ்பந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது, தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது.