சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’… மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான பிரபல நடிகை!

  • January 28, 2021 / 11:07 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. நேற்று, நடிகர் சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் இயக்க உள்ளாராம்.

இவர் டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். ‘டான்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். தற்போது, இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘நானி’ஸ் கேங் லீடர்’ என்ற தெலுங்கு படம் மூலம் ஃபேமஸான பிரியங்கா, இப்போது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ (தமிழ்) படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.