60 வயதான ஹீரோவுக்கு ஜோடி… அதிக சம்பளத்துக்காக ஓகே சொன்ன வாரிசு நடிகை!

  • May 8, 2021 / 08:18 PM IST

முன்னணி ஹீரோவின் மகள் தான் அந்த நடிகை. ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து கொண்டிருந்த இந்த நடிகை தமிழிலும் என்ட்ரியாகி தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இப்போது, இந்த நடிகையின் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், அந்த நடிகை அவரது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறார். இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக உள்ளதாம். பல ஹிட் படங்களை கொடுத்த ஒரு இயக்குநர் தான் இந்த படத்தை இயக்க உள்ளாராம். ஆனால், விஷயம் அதுவல்ல, படத்தின் ஹீரோ யார் தெரியுமா? தெலுங்கு சினிமாவில் மாஸ் என்று சொன்னாலே டக்கென அந்த ஹீரோவின் பெயர் தான் நினைவுக்கு வரும்.

அந்த அளவுக்கு அவரின் மாஸ் சீன்கள் ஆல் ஏரியாவிலும் ஃபேமஸ். அந்த ஹீரோவின் வயதை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க.. 60-வாம். கிட்டத்திட்ட அந்த நடிகையின் அப்பா வயது அந்த ஹீரோவுக்கு. ஆனாலும், அந்த நடிகை அதை பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை, சம்பளம் மட்டும் அதிகமாக கொடுத்தால் நான் அவருடன் டூயட் பாடி ஆட ரெடி என்று சொல்லி விட்டாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus