தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அமலா பால். இவர் தமிழில் ‘வீரசேகரன், சிந்து சமவெளி’ ஆகிய படங்களில் முதலில் நடித்தார். அதன் பிறகு வெளியான ‘மைனா’ திரைப்படம் அமலா பாலுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி தந்தது.
இந்த படத்தை இயக்குநர் பிரபு சாலமன் இயக்க, ஹீரோவாக விதார்த் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை அமலா பாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை’ என படங்கள் குவிந்தது.
அமலா பால் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். பின், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் அமலா பால்.
சமீபத்தில், அமலா பால், ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, நடிகை அமலா பாலின் சொத்து மதிப்பு ரூ.32 கோடி என தகவல் வெளியாகியிருக்கிறது.