வாவ்… பிரியங்கா மோகன் டு கீர்த்தி சுரேஷ்… கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்திய நடிகைகள்!
December 27, 2022 / 12:26 AM IST
|Follow Us
நேற்று (டிசம்பர் 25-ஆம் தேதி) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எடுத்த ஸ்பெஷல் போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை பல நடிகைகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.
1. பிரியங்கா மோகன் :
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியங்கா மோகன். ‘டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான்’ போன்ற படங்களில் நடித்திருந்த இவர் இப்போது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஷிவதா. இப்போது இவர் நடிப்பில் ‘வல்லவனுக்கும் வல்லவன், கட்டம், இறவாக்காலம், இடும்பன்காரி’ என நான்கு தமிழ் படங்களும், மலையாளத்தில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ம்ருதி வெங்கட். ‘தடம், மூக்குத்தி அம்மன், மாறன், தேஜாவு, குற்றம் குற்றமே’ போன்ற படங்களில் நடித்திருந்த இவர் இப்போது ‘பகையே காத்திரு’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
சினமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இப்போது இவர் நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள், புரவி, நான் கடவுள் இல்லை, தி நைட், பஹீரா, கெஸ்ட் : சேப்டர் 2, குறுக்கு வழி’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. இப்போது இவர் நடித்து கொண்டிருக்கும் புதிய படம் ‘கட்டில்’. கணேஷ் பாபு ஹீரோவாக நடிப்பதுடன், அவரே இப்படத்தை இயக்கி வருகிறார்.
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தான் ஃபேமஸானார். இதனைத் தொடர்ந்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். இவர் ‘வீரா, தமிழ்ப் படம் 2, நான் சிரித்தால், வேழம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது, ஐஸ்வர்யா மேனன் தெலுங்கில் ‘ஸ்பை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ஒரு படமும், மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ என்ற படமும் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் மகனும், நடிகருமான கெளதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மஞ்சிமா மோகன்.
சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘மாமன்னன், சைரன்’, தெலுங்கில் ‘போலா ஷங்கர், தசரா’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.