முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

  • March 14, 2023 / 10:48 PM IST

சினிமாவில் வலம் வரும் ஒவ்வொரு ஹீரோயின்களுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோயின்ஸ். நம்ம ஹீரோயின்ஸ் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்கள் இதோ…

1.நயன்தாரா :

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.

இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் இயக்குநர் துரை செந்தில்குமார் படம், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், ஹிந்தியில் ‘ஜவான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

2.சமந்தா :

தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.

இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெர்ஷனில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்த சமந்தா ‘மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்க மகன், தெறி, சூப்பர் டீலக்ஸ், காத்து வாக்குல ரெண்டு காதல்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

2021-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி நடிகை சமந்தாவும், நாகசைத்தன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்போது சமந்தா நடிப்பில் ‘குஷி, சாகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்களும், ‘சிட்டாடல்’ என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

3.கீர்த்தி சுரேஷ் :

பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம் ‘இது என்ன மாயம்’ தான் என்றாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய இரண்டு படங்களும் தான்.

அதன் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பெண்குயின், அண்ணாத்த, சாணிக் காயிதம்’ என படங்கள் குவிந்தது.

கீர்த்தி சுரேஷ் நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘மாமன்னன், சைரன், ரிவால்வர் ரீட்டா’, தெலுங்கில் ‘போலா ஷங்கர், தசரா’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

4.அனுஷ்கா ஷெட்டி :

திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழில் அறிமுகமான முதல் படத்தின் ஹீரோ மாதவன். ‘இரண்டு’ என்ற இந்த படத்துக்கு சுந்தர்.சி தான் இயக்குநர். இப்படத்தில் இடம்பெற்ற ‘மொபைலா மொபைலா’ என்ற பாடல் தான் அனுஷ்காவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது.

அதன் பிறகு இரண்டாவது தமிழ் படமே முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் அமைந்தது. அந்த படம் தான் ‘வேட்டைக்காரன்’. ‘வேட்டைக்காரன்’-க்கு பிறகு வந்த ‘சிங்கம்’ மெகா ஹிட்டானதும் நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வானம், தெய்வத் திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி 1&2, சைலன்ஸ்’ என படங்கள் குவிந்தது.

அனுஷ்கா ஷெட்டி தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’. இதில் ஹீரோவாக நவீன் பொலிஷெட்டி நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் பி.மகேஷ் பாபு இயக்குகிறார்.

5.காஜல் அகர்வால் :

திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவர் நடித்த ‘பழனி, பொம்மலாட்டம், மோதி விளையாடு’ ஆகிய தமிழ் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு ‘நான் மகான் அல்ல’ என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வலம் வந்தார் காஜல் அகர்வால். சுசீந்திரன் இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

‘நான் மகான் அல்ல’ ஹிட்டிற்கு பிறகு நடிகை காஜல் அகர்வாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாற்றான், துப்பாக்கி, அழகு ராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல், கோமாளி’ என படங்கள் குவிந்தது. தமிழ் மொழி படங்கள் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் காஜல் அகர்வால்.

இப்போது காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, கருங்காப்பியம்’, ஹிந்தியில் ‘உமா’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 19-ஆம் தேதி கெளதம் கிச்லு – காஜல் அகர்வால் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில், இக்குழந்தைக்கு ‘நீல் கிச்லு’ (NEIL KITCHLU) என பெயர் சூட்டினார்கள்.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus