சினிமாவில் வலம் வரும் ஒவ்வொரு ஹீரோயின்களுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோயின்ஸ். நம்ம ஹீரோயின்ஸ் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்கள் இதோ…
1.பூஜா ஹெக்டே :
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டேவுக்கு முதல் பட வாய்ப்பு அமைந்ததே தமிழ் சினிமாவில் தான். அது தான் ‘முகமூடி’. இந்த படம் ஹிட் ஆகாமல் போனதால் பூஜா ஹெக்டேவின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் எதுவும் இணையவில்லை.
ஆனால், பூஜா ஹெக்டேவுக்கு படங்களை அடுத்தடுத்து கொடுத்து அவரை ஹீரோயினாக வலம் வர வைத்து அழகு பார்த்தது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா. இப்படி அடித்த ஜாக்பாட்டில் தெலுங்கில் ‘ஒக்க லைலா கோஷம், முகுந்தா, துவ்வாட ஜெகன்னாதம், சாக்ஷ்யம், அரவிந்த சமீதா வீர ராகவா, மகர்ஷி, கட்டாலகொண்டா கணேஷ், அல வைகுந்தபுரமுலோ, மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர், ராதே ஷ்யாம்’ மற்றும் ஹிந்தியில் ‘மொகெஞ்ச தாரோ, ஹவுஸ்ஃபுல் 4’ என படங்கள் குவிந்தது.
சமீபத்தில், பூஜா ஹெக்டே நடித்து தமிழில் ரிலீஸான படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் ஹீரோவாக ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். இப்போது பூஜா ஹெக்டே நடிப்பில் தெலுங்கில் ஒரு படமும், ஹிந்தியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது.
2.ராஷ்மிகா மந்தனா :
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.
விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’.
சமீபத்தில், ராஷ்மிகா நடிப்பில் வெளியான துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’, ‘தளபதி’ விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. இப்போது, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் ஒரு படமும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.
3.ரகுல் ப்ரீத் சிங் :
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் டூயட் பாடிய ரகுல் ப்ரீத் சிங், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்பத்தில் நடித்த ‘புத்தகம், என்னமோ ஏதோ’ போன்ற தமிழ் படங்கள் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பெரிதாக க்ளிக் ஆகவில்லை.
அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ மற்றும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய இரண்டு படங்களும் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்புக்கு கோலிவுட் ஆடியன்ஸை லைக்ஸ் போட வைத்தது. இவ்விரண்டு படங்களுக்கு பிறகு ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தேவ், NGK’ என தமிழ் படங்கள் குவிந்தது. ரகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் கமலின் ‘இந்தியன் 2’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உட்பட 4 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
4.ரெஜினா :
கோலிவுட்டில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் ஹீரோயின் லைலாவுக்கு தங்கையாக நடித்திருந்தார் ரெஜினா. இது தான் ரெஜினா நடிகையாக அறிமுகமான முதல் படமாம். அதன் பிறகு ‘அழகிய அசுரா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக வலம் வந்தார் ரெஜினா.
2013-ஆம் ஆண்டு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா. அப்படத்தில் ரெஜினாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ரெஜினாவுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்ததாக இவரின் கால்ஷீட் டைரியில் ‘ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், MR. சந்திரமௌலி, சிலுக்குவார்பட்டி சிங்கம், சக்ரா, நெஞ்சம் மறப்பதில்லை, கசட தபற, முகிழ்’ என படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
5.லாவண்யா திரிபாதி :
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் லாவண்யா திரிபாதி. இவருக்கு தெலுங்கில் அமைந்த முதல் படமே நவீன் சந்திராவுடன் தான். அது தான் ‘அந்தால ராட்சசி’. இந்த படத்தினை பாப்புலர் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆஃபீஸில் கல்லா கட்டியது.
இந்த படத்துக்கு பிறகு நடிகை லாவண்யா திரிபாதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தூசுகெல்தா, பலே பலே மகோடிவோய், சோகடே சின்னி நயனா, லச்சிம்தேவிகி ஓ லெக்குந்தி, ஸ்ரீரஸ்து சுபமஸ்து. மிஸ்டர், ராதா, யுத்தம் சரணம், வுன்னாதி ஒக்கடே ஜிந்தகி, இன்டெலிஜென்ட், அந்தரிக்ஷம் 9000 KMPH, அர்ஜுன் சுரவரம், A1 எக்ஸ்பிரஸ், சாவு கபுரு சல்லகா’ என தெலுங்கு படங்கள் குவிந்தது.
லாவண்யா திரிபாதி நடித்து சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு படம் ‘ஹேப்பி பர்த்டே’. இந்த படத்தை இயக்குநர் ரித்தேஷ் ராணா இயக்கியிருந்தார். லாவண்யா திரிபாதி தெலுங்கு மொழி படங்கள் மட்டுமில்லாமல் தமிழ் மொழியிலும் ‘பிரம்மன், மாயவன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.