‘சூர்யா 43’ஐ இயக்கும் சுதா கொங்கரா… இதில் வில்லனாக நடிக்கும் பிரபல நடிகையின் காதலர்!

  • September 15, 2023 / 11:01 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவிருக்கிறார். ஏற்கனவே, சூர்யா – சுதா கொங்கரா – ஜி.வி.பிரகாஷ் குமார் கூட்டணியில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

‘சூர்யா 43’ல் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் துல்கர் சல்மானும் நடிக்கவிருக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளும், பிரபல நடிகையுமான அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக பிரபல நடிகை தமன்னாவின் காதலரும், பாலிவுட் நடிகருமான விஜய் வர்மா நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus