‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் இயக்கும் ‘சலார்’… பிரபாஸுக்கு ஜோடி யார் தெரியுமா?

  • January 28, 2021 / 03:21 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சலார்’ படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்க உள்ளாராம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கான பூஜை கடந்த ஜனவரி 15-ஆம் தேதி போடப்பட்டதாம்.

சமீபத்தில், இந்த படத்தின் செம்ம மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். இந்த செம்ம மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

இதன் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோ பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus