‘விஜய் 65’-யில் பவர்ஃபுல்லான வில்லி ரோல்… அந்த முன்னணி ஹீரோயினிடம் பேச்சுவார்த்தை!

  • August 27, 2020 / 02:37 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடியாம். இதில் விஜய்க்கு ரூ.70 கோடியும், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.10 கோடியும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தற்போது, இந்த படத்தில் விஜய்-க்கு எதிராக மோதும் ஒரு பவர்ஃபுல் வில்லி ரோல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ரோலில் நடிக்க பிரபல நடிகை தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus