கோட் சூட்டில் மாஸ் காட்டும் ரித்து வர்மா… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரித்து வர்மா. இவர் அறிமுகமான முதல் தெலுங்கு படத்தின் ஹீரோவே ஜூனியர் என்.டி.ஆர் தான். அப்படத்தின் பெயர் ‘பாட்ஷா’, அதில் ‘பிங்கி’ என்ற ரோலில் நடித்திருந்தார் ரித்து வர்மா. அதன் பிறகு ‘பிரேம இஷ்க் காதல், எவடே சுப்பிரமணியம்’ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தாலும், ‘பெல்லி சூப்புலு’ (தெலுங்கு) என்ற படத்தில் தான் ஹீரோயினாக வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ரித்து வர்மா.

‘பெல்லி சூப்புலு’ படத்துக்கு பிறகு நடிகை ரித்து வர்மாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘கேஷவா’, தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி 2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், புத்தம் புதுக் காலை, தீனி’ என படங்கள் குவிந்தது.

இப்போது ரித்து வர்மாவின் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ (தமிழ்), ‘கணம்’ (தமிழ் / தெலுங்கு) என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.