தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். திரையுலகில் என்ட்ரியான புதிதில் சில படங்களில் நடித்திருந்தாலும், ‘அட்டகத்தி’ என்ற படத்தில் தான் ஆடியன்ஸ் மனதில் ரெஜிஸ்டர் ஆனார். அதன் பிறகு நடித்து 2015-ஆம் ஆண்டு ரிலீஸான ‘காக்கா முட்டை’ என்ற திரைப்படம் தான் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, கடலை, கட்டப்பாவ காணோம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், லக்ஷ்மி, சாமி ஸ்கொயர், செக்கச்சிவந்த வானம், வடசென்னை, கனா, மெய், நம்ம வீட்டுப் பிள்ளை, வானம் கொட்டட்டும், திட்டம் இரண்டு, பூமிகா’ என படங்கள் குவிந்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், டிரைவர் ஜமுனா, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக், துருவ நட்சத்திரம்’, தெலுங்கில் ‘பீம்லா நாயக்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் புதிய தமிழ் படத்தில் நடித்து வந்திருக்கிறார்.

அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது உதவியாளரை அழைத்து குடிக்க சுடு தண்ணீர் கேட்க, அவரும் கேரவனுக்கு சென்று எடுத்து வந்து கொடுத்திருக்கிறார். ஆனால், சில நிமிடங்கள் தாமதமாக வந்து உதவியாளர் சுடு தண்ணீர் கொடுத்ததால் ஐஸ்வர்யா ராஜேஷ் கோபத்தில் அவரை பளாரென கன்னத்தில் அறைந்திருக்கிறார். இந்த சம்பவம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது
