சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சிலம்பரசன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளாராம். இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
இப்படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது, இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.